செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு!
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று(மே 16) நடைபெற உள்ளது.
மழை அப்டேட்!
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோடி பேரணி!
பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் இன்றும் நாளையும் தொடர் பேரணிகளை மேற்கொள்ளவுள்ளார். இன்று ஜான்பூர் மற்றும் அசம்கர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல். போட்டியில் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 66ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
துணை தேர்வு!
10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்கள், தோ்வை எழுத இயலாமல் போன மாணவர்கள் துணைத் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை துணைத் தோ்வு நடைபெறவுள்ளது.
ஜூன் 24 முதல் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 61 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திமுக இளைஞரணி ஆய்வு கூட்டம்!
திமுக இளைஞரணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் அன்பகத்தில் நடைபெறுகிறது.
வெப்பநிலை!
இன்று முதல் மே 19 வரை அடுத்த 4 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35°-39° செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று மே 16 முதல் அடுத்த 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டம்!
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொள்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் டெங்கு: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி மலச்சிக்கலைச் சந்திப்பவரா நீங்கள்?