விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி!
பிஎம் கிசான் நிதியின் கீழ் 17-வது தவணையை நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் 9.26 கோடி விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பிரதமர் மோடி இன்று (ஜூன் 18) வழங்க உள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்று தனது வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறார்.
பொன்முடி வழக்கு விசாரணை!
அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று முதல் 4 நாட்கள் விசாரணை நடைபெற உள்ளது.
பவன்கல்யாண் பொறுப்பேற்பு!
ஆந்திரா துணை முதல்வரான பவன்கல்யாணுக்கு 4 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு ஆரம்பம்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு .க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
கள்ளக் கடல் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கும்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 94வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
இன்று முதல் மழை!
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதல்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி
பக்ரீத் பிரியாணி பரிதாபம்: அப்டேட் குமாரு