ரத்தன் டாடா மறைவு!
இந்திய தொழில்துறையின் முக்கிய அடையாளமாக கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வயது மூப்பு மற்றும் உடல்நல பாதிப்பால் நேற்று இரவு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று (அக்டோபர் 10) மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
லாவோஸ் செல்கிறார் மோடி
ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று (அக்டோபர் 10) லாவோஸ் புறப்பட்டு செல்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் இன்று தேர்வு!
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்தார்.
திண்டுக்கலில் புத்தகத்திருவிழா!
திண்டுக்கல் மாவட்ட 11-வது புத்தகத்திருவிழா டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
10 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாணவர் கொலை – கல்லூரிக்கு விடுமுறை!
மாநில கல்லூரி மாணவர் ரூட் தல விவகாரம் தொடர்பாக நடந்த மோதலில் கொல்லப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக இன்று அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்!
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு இன்று சென்னை எழும்பூர் – நாகர்கோவில், எர்ணாகுளம் – மங்களூர் வழித்தடம் உட்பட 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டொனல்ட் டிரம்புக்கு கால வரம்பு நிர்ணயம்!
கமலா ஹாரிஸுடன் இரண்டாவது முறையாக விவாதத்தில் கலந்துகொள்ளும் விருப்பத்தை இன்று நண்பகலுக்குள் தெரிவிக்க வேண்டுமென டோனால்ட் டிரம்புக்கு CNN செய்தி நிறுவனம் கால வரம்பு விதித்துள்ளது.
வேட்டையன் – பிளாக் ரிலீஸ்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் மற்றும் ஜீவா நடிப்பில் பிளாக் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…