ஹத்ராஸ் செல்கிறார் ராகுல்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 5) நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது விசாரணை!
நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கெஜ்ரிவால் ஜாமீன் மனு விசாரணை!
மதுபான கொள்கை மோசடி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் ஆரம்பம்!
எட்டு அணிகள் பங்கேற்கும் 8வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதுகின்றன.
மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி!
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 36-வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் பேருந்து இயக்கம்!
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 415 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கவுண்டம்பாளையம் ரிலீஸ் ஆகாது!
மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் இன்று வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில் புறப்பாடு தாமதம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 9 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூலி படத்தின் ஷுட்டிங் ஆரம்பம்!
நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள கூலி படத்தின் ஷூட்டிங் இன்று ஐதராபாத்தில் துவங்க உள்ளது.
முதல் டி20 – இந்தியா – ஜிம்பாப்வே மோதல்!
இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை
டிஜிட்டல் திண்ணை: கலைஞர் கனவு இல்லம்… அதிகாரிகள் ஆட்டம்… கசப்பில் திமுகவினர்!