ரெட் அலர்ட்!
நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழையும், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஐடிஆர் – இன்று கடைசி நாள்!
2023- 24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள். கடைசி தேதியை தவறினால், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக கேரளாவில் பத்தனம்திட்டா, காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கண்ணூர், பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம், வயநாடு ஆலப்புழா ஆகிய 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ராகுல் பயணம் ஒத்திவைப்பு!
கேரளாவில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் இன்று வயநாடு செல்ல இருந்த நிலையில் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை 9:30 மணிக்கு துவங்குகிறது.
திருச்சி செல்கிறார் உதயநிதி
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மனு விசாரணை!
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவிருக்கிறது.
திருத்தணியுடன் ரயில் நிறுத்தம்!
அரக்கோணம் பணிமனையில் இன்று காலை 11.10 முதல் பகல் 1.10 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருப்பதி செல்லும் ரயில் திருத்தணியுடன் நிறுத்தப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று!
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து இன்று இந்திய நேரப்படி 12.50 மணிக்கு விளையாடுகிறார். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் 11 மணிக்கும், லக்சயா சென் பகல் 1.40 மணிக்கும் விளையாடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா