பொதுப் பிரிவு கலந்தாய்வு!
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. முதல் சுற்றில் 26,654 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஹேமந்த் சோரன் ஜாமீன் ரத்து?
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்!
ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சென்னை டி பி ஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளது.
ஒருநாள் உள்ளூர் விடுமுறை!
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணியில் முருகன் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவர் என்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
25 நூல்களை வெளியிடும் மோடி
இந்திய பழங்குடி மொழிகளை கற்க உதவும் 25 அடிப்படை நூல்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட உள்ளார்.
ஆடிப்பூரத் திருவிழா!
புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வாழை செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
‘வாழை’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபாஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பதக்கத்தை குறிவைக்கும் துப்பாக்கிகள்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் துப்பாக்கி சுற்று 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுடா மற்றும் ரமிதா ஜிண்டால் ஆகியோர் பதக்கங்களை குறிவைத்து களமிறங்க உள்ளனர்.
நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழம்- வேர்க்கடலை மில்க்ஷேக்