டாப் 10 நியூஸ் : தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் முதல் இந்தியா-இலங்கை மோதல் வரை!

அரசியல்

இந்தியா – இலங்கை மோதல்!

டி20 போட்டியை தொடர்ந்து இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பில் இன்று (ஆகஸ்ட் 2) மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

உள்ளூர் விடுமுறை!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம்!

நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

6  திரைப்படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இன்று BOAT, ‘வாஸ்கோடகாமா’, ஜமா,  ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு,  மழை பிடிக்காத மனிதன், பேச்சி உள்ளிட்ட 6  திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகின்றன.

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ராஜமவுலி ஆவணப்படம்!

சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக “மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)” என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாக உள்ளது.

உலகத் திரைப்படவிழா!

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு உலகத் திரைப்படவிழா நடக்கிறது.

கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் அறிமுகம்!

சிட்ரோன் நிறுவனம் தனது பசால்ட் என்ற கூபே ஸ்டைல் எஸ்யூவி காரை இன்று இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது.

கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 138வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் வித் ஹோல் ஸ்ட்ராபெர்ரி  

உசுரே நீ தானே… நீ தானே: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0