சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் பிரதமர்
இந்தியா முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூ.2500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 25) விடுவிக்கிறார். மேலும் சுமார் 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் சுமார் ரூ.5000 கோடி கடன் உதவியும் வழங்க உள்ளார்.
மத்திய தேர்தல் குழு கூட்டம்!
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலையொட்டி டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
முத்தமிழ் முருகன் மாநாடு!
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ளன.
உயர் நீதிமன்ற பவள விழாவில் மோடி!
ராஜஸ்தானின் ஜோத்பூரில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் 75ம் ஆண்டு பவள விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அங்கு அவர் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார்.
தொட்டபெட்டாவிற்கு செல்லலாம்!
சோதனை சாவடி அமைப்பதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பேனர்கள் அகற்றம்!
சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் இன்று முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மவுண்ட் போரூர் சாலையில் உள்ள புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்று முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து!
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில், புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை பெய்யும்!
தமிழகத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டம் என் கையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சதீஷ் நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே!
கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!