மீண்டும் விசாரணைக்கு வரும் பொன்முடி வழக்கு!
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று (ஆகஸ்ட் 19) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பெண் மருத்துவர் கொலை – சிபிஐ விசாரணை!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ இன்று 4வது நாளாக விசாரணை நடத்த உள்ளது.
இன்று முதல் வழக்கம் போல் ரயில் சேவைகள்!
சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
11 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக புகைப்பட தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ப்ளூ மூன்!
ப்ளூ மூன் எனப்படும் நீல நிலவு இன்று தோன்ற இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை இந்தியாவில் இன்று இரவு முதல் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை காண முடியும்.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!
பவுர்ணமியை ஒட்டி இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வேட்டையன் முக்கிய அப்டேட்!
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது.
வாழை பட ட்ரெய்லர் ரிலீஸ்!
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் வாழை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 155-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…