பிரதமர் – தொழில்துறை சந்திப்பு!
பட்ஜெட்டுக்குப் பிறகு முதன் முறையாக தொழில்துறையைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (ஜூலை 30) சந்தித்துப் பேசுகிறார்.
திருமங்கலத்தில் முழு அடைப்பு!
கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று திருமங்கலத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது தீர்ப்பு!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
மேட்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு!
சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யும் வகையில் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் 137 நாட்கள் 9.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
துணைத் தேர்வு முடிவுகள்!
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிளே ஆஃப் சுற்றுகள் தொடக்கம்!
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. முதல் பிளே ஆப் போட்டியில் கோவை, திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெண்கல பதக்கத்தை குறிவைக்கும் மனு பாக்கர்!
இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் – சிங் சரபோஜ்ட் இருவரும் கொரியாவின் லீ வோன்ஹோ-ஓ யே ஜின் எதிர்த்து விளையாடவுள்ளனர்.
கடைசி டி20 போட்டி!
இந்தியா – இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பல்லெகெல்லாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 135வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ரயில்வே வேலை விண்ணப்பிக்கலாம்!
RRB வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 7951 பணியிடங்களுக்கு இன்று முதல் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பட்டர் ஃப்ரூட் சாக்கோ
டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு