டாப் 10 நியூஸ் : நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் இன்ஜினியரிங் கலந்தாய்வு வரை !
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 22) தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!
இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று காலை தொடங்குகிறது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்!
நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று கூடுகிறது.
கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகள்?
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரவு திட்ட அறிக்கை மீது நாளை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
ரேஷன் கடைகள் மூலம் மதுபானம்!
ரேஷன் கடைகள் மூலமாக மதுபானம் விற்பனை அனுமதிக்க வேண்டும் என ஐடி ஊழியர் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முக்கிய பரிசோதனை!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று காலை இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.
ஆஜராவாரா செந்தில்பாலாஜி?
குற்றச்சாட்டு பதிவுக்காக இன்று செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 2,438 பணியிடங்கள்!
2024-25 ஆம் ஆண்டில் அப்ரண்டீஸ் அடிப்படையில் 2438 பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை இன்று காலை 10 மணி முதல் தெற்கு ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 127வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சியா சீட்ஸ் டிரிங்க்
இது என்னடா புதுசா இருக்கு? – அப்டேட் குமாரு