டாப் 10 நியூஸ் : பக்ரீத் பெருநாள் முதல் எடியூரப்பா பாலியல் வழக்கு விசாரணை வரை!

Published On:

| By christopher

எடியூரப்பா விசாரணைக்கு ஆஜர்!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 80 வயதாகும் கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் எடியூரப்பா இன்று (ஜூன் 17) சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.

பக்ரீத் பெருநாள்!

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை தினமான இன்று (ஜூன் 17) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரேபேரேலியா   வயநாடா?

நாடாளுமன்ற தேர்தலில் ரேபேரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, இன்று எந்த தொகுதியில் எம்.பியாக தொடர உள்ளார் என்பதை அறிவிக்க உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – போராட்டம் அறிவிப்பு!

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அம்மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான பாஜக இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்கி ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘Bhairava Anthem’ வீடியோ வடிவில் இன்று காலை 11 மணியளவில்  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

திருப்பதியில் கடும் கூட்டம்!

பக்ரீத் திருநாளையொட்டி இன்று பொது விடுமுறை என்பதால் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இடி, மின்னலுடன் மழை!

“தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் மோதல்!

உலக கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று குரூப் சி பிரிவு அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 93வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்

என்னென்ன சொல்றாங்க பாருங்க… அப்டேட் குமாரு