9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் நாகை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக இன்று நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.
தீபாவளி அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்!
இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் செல்கிறார்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாள்!
இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கூடுதல் மெட்ரோ இயக்கம்!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 8 முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக வரும் 21ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து 212-வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தூங்கிக் கொண்டிருந்த எடப்பாடியை எழுப்பி விட்டது யார்? – அமைச்சர் நேரு பதிலடி!
சேலத்தில் கொடூரம்… அக்கா, தம்பி கொலை!