உருவாகும் புதிய காற்றழுத்தம்!
மத்திய அந்தமான் கடல் பகுதியில் இன்று (அக்டோபர் 21) புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்!
பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 3வது நபர் இன்று மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்.
வியட்நாமில் புதிய அதிபர் தேர்வு!
வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவிக்கு அடுத்த நிலையில் அதிபர் பதவி உள்ளது. தற்போதைய அதிபர் டோ லாம் அந்த இரண்டு பொறுப்புகளையும் கவனித்து வரும் நிலையில், மக்களின் அரசியல் எழுச்சி காரணமாக இன்று வியட்நாம் எம்.பிக்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
காவலர் நீத்தார் நினைவு நாள்!
சென்னையில் இன்று காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎட் கலந்தாய்வு நடைபெறும்!
சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த பிஎட் கலந்தாய்வு (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகள்) கனமழை காரணமாக இன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் இணையதளம் இயங்கும்!
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்ட www.passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் இணையதளம் காலை 6 மணிக்கு பிறகு வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குவா இரண்டாவது பாடல் ரிலீஸ்!
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப் படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது பாடலான ‘யோலோ’ இன்று வெளியாக இருக்கிறது.
சிம்புவின் புதிய படத்தின் அப்டேட்!
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 6.06 மணிக்கும் வெளியாகும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லக்கி பாஸ்கர்’ பட ட்ரெய்லர் ரிலீஸ்!
வாத்தி’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…