மக்களவையில் நீட் முறைகேடு விவாதம்!
நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 28) நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த உள்ளன.
ஆளுநரை சந்திக்கிறார் பிரேமலதா
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திக்க உள்ளார்.
மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.
பைடன் மற்றும் டிரம்ப் விவாதம்!
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் போட்டியிடும் பைடன் மற்றும் டிரம்ப் இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் இன்று நடைபெறுகிறது.
அமர்நாத் யாத்திரை – புறப்படும் முதல் குழு!
அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில், யாத்திரிகர்களின் முதல் குழு இன்று அதிகாலை காஷ்மீரிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
சிறப்பு கல்வி கடன் முகாம்!
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.
இன்றே கடைசி தேதி!
கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் மோதல்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி ஜூலை 1- ந் தேதி வரை நடக்கிறது.
எலான் மஸ்க் பிறந்த தினம் இன்று!
தென்னாப்பிரிக்காவில் ஆர்வமுள்ள சிறுவனாக இருந்து விண்வெளி பயணம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என ஒரு முன்னோடி தொழிலதிபராக இன்று அடையாளம் காணப்படும் எலான் மஸ்க் பிறந்த தினம் இன்று.
மாரியப்பன் தங்கவேலுவின் பிறந்தநாள்!
இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவின் பிறந்தநாள் இன்று.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 104-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி கார்ன் ஃப்ரை
கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன்: பெரியகருப்பன் அறிவிப்பு!