டாப் 10 நியூஸ் : NDA நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் முதல் வரலட்சுமி திருமணம் வரை!
நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் இன்று (ஜூலை 2) உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி!
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழா – அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!
பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரத்தில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 44-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார்.
செயலர்களுடன் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!
ஏழு முக்கிய அம்சங்கள் தொடர்பாக, அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசிக்க உள்ளார்.
இன்று கடைசி நாள்!
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள் என்பதால் டிக்கெட் புக் செய்பவர்கள் தயாராக இருங்கள்.
ஆம்புலன்ஸ் சேவை பணிக்கான நேர்முகத் தேர்வு!
கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை, நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் இன்று!
நடிகர் சரத்குமாரின் மகளும் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் இன்று (ஜூலை 2 ) நடைபெற உள்ளது.
மிதமான மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா திரும்பும் வீரர்கள்!
டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் பார்படாஸில் ஏற்பட்ட சூறாவளியால் சிக்கிக்கொண்ட நிலையில், இன்று அவர்கள் அனைவரும் இந்தியா திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 108-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா : மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!