டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!

Published On:

| By Kavi

top 10 news from national

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! top 10 news from national

கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 14) தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கும், விழுப்புரம், தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு

பிரதமர் மோடி இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இந்த மாநாடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான முக்கியப் படியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எங்கெங்கு மழை?

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

காா்த்திகை மாத பெளா்ணமி இன்று (டயாபர் 14) மாலை 4.17 மணிக்குத் தொடங்கி, நாளை (டிசம்பர் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது.இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் கூறியுள்ளது.. நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சிறையில் இருந்து வெளியே வரும் அல்லு அர்ஜுன்

புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின்போது பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் இன்று காலை அவர், சஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்!

வைக்கம் நூற்றாண்டு விழாவுக்கு சென்று வந்தது பற்றி திமுவினருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், , “மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை!

முக்கொம்பு மேலணையிலிருந்து இன்று ,25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு திருச்சி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது விநியோக சிறப்பு திட்டம்!

தூத்துக்குடி, ராணிப்பேட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பொது விநியோக குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.52-ஆகவும் இன்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சத்து மாவு ஹெர்பல் கொழுக்கட்டை!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக பொதுக்குழுவுக்கு ரெட் அலர்ட்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel