புதினுடன் மோடி பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உள்ளூர் வாகனத்துக்கு கட்டணவிலக்கு இல்லை!
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டணவிலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் செல்கின்றன!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதனையடுத்து இன்று காலை முதல், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
டெல்லி செல்லும் பாஜக தலைவர்கள்!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் இன்று (ஜூலை 9) டெல்லி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடரை சமன் செய்யுமா இந்தியா?
இந்தியா தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி!
ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் மதியம் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவர்.
கர்வ்.இவி அறிமுகம்!
கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வ்.இவி (Curvv.ev) இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 115-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
மிதமான மழை
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: சோர்வடைந்த முகம்… பிரகாசமாக மாற…