25 ஆயிரம் பெண்களுடன் மோடி கலந்துரையாடல்!
பிரதமா் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று (மே 21) கலந்துகொள்கிறார். இதில், குடும்பத் தலைவிகள், மருத்துவா்கள், ஆசிரியா்கள், தொழிலதிபா்கள், வழக்கறிஞர்கள் என பலதரப்பட்ட பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
கனமழை!
இன்று (மே 21)தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் துக்க நாள்!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட 9 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த மே 19ஆம் தேதி உயிரிழந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (மே 21) இந்தியா முழுவதும் துக்கநாள் அனுசரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் குவாலிஃபயா்!
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் – சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று அகமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் மோதுகின்றன.
ராஜீவ் காந்தி நினைவு நாள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் எழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
மணிஷ் சிசோடியா ஜாமின் வழக்கில் தீர்ப்பு!
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
படகு போட்டி ரத்து!
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று நடைபெறவிருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம்!
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இதில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை, காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
நடிகர் மோகன்லால் பிறந்தநாள்!
மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு என இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லால் இன்று தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 66ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : மோடி பெண்களுடன் கலந்துரையாடல் முதல் மோகன்லால் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு வடை