நாமக்கல் செல்கிறார் ஸ்டாலின்
”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 22) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் மோடி
ரஷ்யாவின் கசான் நகரில் 2 நாள் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யாவிற்கு புறப்படுகிறார்.
அமித் ஷா பிறந்தநாள்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்!
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
13 மாவட்டங்களில் கனமழை!
வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கும் மற்றும் நாமக்கலில் ஒரு சில இடங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
உயிர் சக்தி வேளாண் மாநாடு!
இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பு (BDAI) இன்றும் நாளையும் இந்திய அளவிலான உயிர் சக்தி வேளாண் மாநாட்டை பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது.
பி.எட் கவுன்சிலிங்!
சென்னை, லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று பி.எட். (கணிதவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், மனையியல், பொருளியல் மற்றும் வணிகவியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னையில் பேச்சுப் போட்டி!
சென்னை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியருக்கு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இன்று பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 219வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…