டாப் 10 நியூஸ் : கமலா ஹாரிஸ் உரை முதல் கமல்ஹாசன் பிறந்தநாள் வரை!

Published On:

| By christopher

Top 10 News: From Kamala Harris' speech to Kamal Haasan's birthday!

கமலா ஹாரிஸ் உரையாற்றுகிறார்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரிஸ் இன்று (நவம்பர் 7) ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

சூரசம்ஹாரம் விழா!

கந்த சஷ்டியின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம்  திருச்செந்தூர், பழனி உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் இன்று நடைபெறுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாதுகாப்பு தினம்!

பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி குழந்தை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

11 மாவட்டங்களில் கனமழை!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு!

சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

மலை ரயில் சேவை ரத்து!

கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

2கே லவ் ஸ்டோரி பட டீசர் ரிலீஸ்!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘2கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்!

தமிழ்திரையுலகின் மூத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான பத்ம பூஷண் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும்  ’தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா மசாலா

த்ரிஷா இல்லனா நயன்தாரா: அப்டேட் குமாரு

அரசு ஊழியர்கள் மீது ED வழக்கு தொடர முன் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share