கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அதிமுக தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வருகிறது.
சர்வதேச யோகா தினம்!
10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள SKICC இல் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
ஆளுநரை தகுதிநீக்கம் கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆதாயம் தரும் இரட்டைப்பதிவு வகிப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
நீட்’டுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நெல்லையில் உள்ளூர் விடுமுறை!
நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!
பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
துப்பாக்கி, போக்கிரி ரீரிலீஸ்!
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளிய துப்பாக்கி, போக்கிரி மற்றும் கமலின் குணா ஆகிய படங்கள் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 96வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பா அமெரிக்கா கோப்பை தொடர் ஆரம்பம்!
தென் அமெரிக்கா நாடுகளுக்காக நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அர்ஜெண்டினா – கனடா அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்