டாப் 10 நியூஸ் : கலைஞர் பிறந்தநாள் முதல் வெப்ப அலை எச்சரிக்கை வரை!

அரசியல்

கலைஞர் 101வது பிறந்த நாள்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ராணுவம், போலீசார் குவிப்பு!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவ படையினர் மற்றும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10 மாவட்டங்களில் மழை!

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கால்நடை மருத்துவம் விண்ணப்பம்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையத்தளம் https://adm.tanuvas.ac.in/மூலமாக பெற்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்!

செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் இன்று ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

‘காதலிக்க நேரமில்லை’ – வீடியோ ரிலீஸ்!

ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வௌியாகிறது.

வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 79வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

ஓமன் – நமீபியா  அணிகள் பலப்பரீட்சை!

ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் 9வது உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஓமன் – நமீபியா  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் சாம்பார்

சட்டு புட்டுன்னு ஸ்கூல திறங்கடா: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *