ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 73 பெண்கள் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வயநாடு இடைத்தேர்தல்!
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடும் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
தூத்துக்குடி செல்கிறார் உதயநிதி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கிறார்.
தஞ்சாவூர் செல்கிறார் ஆளுநர்
பெரிய கோவிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தஞ்சாவூருக்கு செல்ல உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் கனமழை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் தனியார் பள்ளி திறப்பு!
சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு வெளியானதாகக் கூறப்படும் தனியார் பள்ளியில் இன்று முதல் 10, 11 மற்றும் 12ஆம் மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளை நடத்த முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் ஆய்வு!
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி இன்றும், நாளையும் ஆய்வு செய்யவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓ.பி.எஸ். தம்பி வழக்கில் தீர்ப்பு!
கோவில் பூசாரி தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீதான வழக்கில் திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ.
வா வாத்தியார் டீசர் ரிலீஸ்!
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ’வா வாத்தியார்’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ரோஜாப்பூக் கன்னங்களுக்கான ரோஸ் வாட்டர்… நீங்களே செய்யலாம்!