ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்!
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்டம்பர் 18) நடைபெறுகிறது. இது ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
NPS வாத்சல்யா திட்டம் தொடக்கம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று NPS வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மைனர் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) கார்டையும் அவர் வழங்க உள்ளார்.
புதுச்சேரியில் பந்த்!
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று பந்த் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரியில் பந்த் எதிரொலியாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்!
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று காலை 6:11 மணிக்கு தொடங்கி காலை 10:17 மணிக்கு முடிவடைகிறது.
சென்னை பல்கலை. பேராசிரியர்கள் நிபந்தனை!
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் 8 அம்சக் கோரிக்கைகளை இன்று நிறைவேற்றாவிட்டால், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகிறது!
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சார் பட டிரைலர் வெளியீடு!
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் டிரைலர் மற்றும் இசைஇன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
வெயில் இயல்பைவிட அதிகமாக இருக்கும்!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!