டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் இந்தியா – வங்கதேசம் இறுதி நாள் ஆட்டம் வரை!

அரசியல்

ஜம்மு காஷ்மீர் இறுதி கட்ட வாக்குப் பதிவு!

ஜம்மு காஷ்மீரில் 40 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (அக்டோபர் 1) நடைபெறுகிறது.

24 மணி நேரமும் மதுரை ஏர்போர்ட்!

மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளன.

இன்று முதல் தடை!

விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளின் எஸ்எம்எஸ் இனி வராது!

ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க செல்பேசி நிறுவனத்தில் பதிவு செய்யாத வங்கிகளின் எஸ்எம்எஸ் இனி வாடிக்கையாளர்களை சென்றடையாது என டிராய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சாதனை படைக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

சிவாஜி பிறந்தநாள் : முதல்வர் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையார், தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.

திருப்பதி – விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் சுமார் 4 மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கரூர் – திருச்சி ரயில் ரத்து!

கரூர் ரயில்வே யார்டில் பொறியியல் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதை முன்னிட்டு கரூரில் இருந்து  திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை பெய்யக்கூடும்!

குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *