வட மாவட்டங்களில் கனமழை!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, டெல்டா பகுதிகள் மற்றும் பெங்களூரிலும் இன்று (நவம்பர் 12) கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்!
கனமழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு தயாராகும் ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல், வயநாடு மற்றும் பெங்களூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கஸ்தூரி முன் ஜாமீன் மனு விசாரணை!
திராவிடர்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரியுள்ள மனு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசரணைக்கு வருகிறது.
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம்!
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், அதனை கண்டித்து பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மீனவர்கள் இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
திருவனந்தபுரம் – பெங்களூரு சிறப்பு ரயில்!
திருவனந்தபுரம் – பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் மூன்று மாதங்கள் இயக்கப்படவுள்ளது.
திருவொற்றியூர் பள்ளி திறப்பு – ஆலோசனை!
வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும், 35 முயல்களையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று மாணவர், பெற்றோருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
‘ஊசி ரோசி’ பாடல் இன்று வெளியாகிறது!
பிரபுதேவா, மடோனா செபஸ்டியான் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின் `ஊசி ரோசி’ பாடல் இன்று வெளியாகவுள்ளது.
மிஸ் யூ படத்தின் டீசர் ரிலீஸ்!
சித்தார்த் நடித்து வரும் மிஸ் யூ என்ற படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 க்கும், டீசல் ரூ. 92.34 க்கும் விற்பனையாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் காந்தி பொய் பேசுகிறார்- தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!
அக்டோபர் மாதம் வரை ரூ.79,772 கோடி வருவாய்: வணிகவரித்துறை தகவல்!