கனமழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 14) புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக ஆர்ப்பாட்டம்!
இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் இன்று விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பி.எட். படிப்பு கலந்தாய்வு!
நடப்பாண்டு பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று முதல் தொடங்குகிறது.
பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
தீபாவளி : அமைச்சர் ஆலோசனை!
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இதர அம்சங்கள் தொடர்பான பயிற்சி, எமிஸ் வலைதளம் வழியாக ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் இன்று இணையவழியே வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரிய கூட்டம்!
வக்பு சொத்துக்களுக்கு என்ஒசி வழங்கும் நடைமுறையை இல்லாமல் ஆக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மோதல்!
2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் குரூப் A பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று சார்ஜா மைதானத்தில் மோதுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 210-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்
பிரச்சனைகள் பலவிதம் அதில் இது தனி ரகம் – அப்டேட் குமாரு