19 மாவட்டங்களில் கனமழை!
திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 2) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி ரயில்!
சென்னையில் இயங்கி வரும் புறநகர் ரயில்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
விடுமுறை அட்டவணைப்படி…
இன்று காலை 5மணி முதல் இரவு 11 மணி வரை விடுமுறை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கந்தசஷ்டி விழா துவக்கம்!
திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கி 7 நாள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று முதல் நவம்பர் 4 வரை 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
கல்லறை திருநாள் – பூக்கள் விலை உயர்வு!
கிறிஸ்துவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம்!
இஸ்ரேல் போருக்கு நடுவே காசா பகுதியில் இன்று மீண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஐநா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
முன்னிலை பெறுமா இந்தியா?
3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்கிறது.
குற்றாலத்தில் குளிக்க தடை!
கனமழை காரணமாக தென்காசி குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 230வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…