Top 10 News : From GST Council Meeting to Vettaiyan's First Single!

டாப் 10 நியூஸ் : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரை!

அரசியல்

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம்!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று (செப்டம்பர் 9) ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டம் நடைபெற உள்ளது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு!

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ரஷியாவில் அஜித் தோவல்

அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2 நாட்கள் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கு!

​அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று நடைபெற உள்ளது

14 ஆம் தேதி வரை மழை!

வங்கக் கடலில் இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என்றும், தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ’GlowTime’ நிகழ்வு!

ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வான ’GlowTime’ நிகழ்வு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – வங்கதேச டெஸ்ட் டிக்கெட்!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் முதல் சிங்கிள்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் முதல் சிங்கிளான மனசிலாயோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப்!

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் இன்று துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 176-வது நாளாக  விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மட்டன் கொத்துக்கறி

டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *