தேசிய விண்வெளி தினம்!
நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்ததை கொண்டாடும் விதமாக இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை இன்று (ஆகஸ்ட் 23) கொண்டாடுகிறது.
ராஜ்நாத் அமெரிக்க பயணம்!
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.
வழக்கறிஞர்கள் போராட்டம்!
தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்து பெரம்பலூர் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தொட்டபெட்டா செல்ல தடை நீட்டிப்பு!
கட்டண சோதனைச்சாவடி பணிகள் நடைபெற்று வருவதால் உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை 4வது நாளாக இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங் முடிவுகள் வெளியீடு!
நீட் இளங்கலை (NEET UG 2024) முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கான முடிவுகள் இன்று மருத்துவ கவுன்சலிங் கமிட்டியால் (MCC) அறிவிக்கப்பட உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வார இறுதி நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றும், நாளையும் 330 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்குகிறது.
இன்று உள்ளூர் விடுமுறை!
சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒரேநாளில் 5 திரைப்படங்கள் ரிலீஸ்!
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கொட்டுக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கித்தில் உருவாகி இருக்கும் ‘வாழை’, விமல், கருணாஸ் நடித்துள்ள ‘போகும் இடம் வெகுதூரமில்லை’, அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாலா’. நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள அதர்மக் கதைகள் ஆகிய 5 திரைப்படங்கள் இன்று ரிலீஸ் ஆகின்றன.
இந்திரா ரீ ரிலீஸ்!
நடிகர் சிரஞ்சீவியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 2002ம் ஆண்டு நடித்த தெலுங்கு திரைப்படமான ‘இந்திரா’ இன்று மறுவெளியீடாகி உள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!
கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை