டாப் 10 நியூஸ் : காங்கிரஸின் ஆளுநர் மாளிகை முற்றுகை முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை!

Published On:

| By christopher

Top 10 News: From Congress protest to red alert for Chennai!

காங்கிரஸ் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க மறுப்பதை கண்டித்து இன்று (டிசம்பர் 18) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.

கோவை செல்கிறார் உதயநிதி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு செல்கிறார்.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன பிரதிநிதிகள் சந்திப்பு!

ஐந்து ஆண்டுகளுக்கு பின் இன்று சீனா தலைநகர் பீஜிங்கில், இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 23வது கூட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ஜித சேவை டிக்கெட் ரிலீஸ்!

திருப்பதி திருமலையில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில், ஒவ்வொரு மாதத்துத்துக்குமான ஆர்ஜித தரிசன சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அவ்வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

திண்டிவனத்தில் அப்போலோ புரோட்டான் மருத்துவர்!

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில், இன்று மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

வணங்கான் இசை வெளியீட்டு விழா!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைப்பெறவுள்ளது.

காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவெண்டர் நேரமே’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிராவை நோக்கி டெஸ்ட்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கியுள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03க்கும், டீசல் ரூ.92.61க்கும் விற்பனையாகிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!

ஒரே நாடு ஒரே புயல் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share