விக்கிரவாண்டி பரப்புரை நிறைவு!
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று (ஜூலை 8) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் முறைகேடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அண்மையில் பதவியேற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் தேதி வரையும் பிறகு ஜூலை 13ஆம் தேதி என மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இலவச நாப்கின் – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் முக்கிய ஆலோசனை!
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும், எம்எல்ஏக்களுக்கு மத்தியிலும் பிளவு நீடிப்பதால், கட்சி மேலிட உத்தரவுப்படி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தையல்நாயகி கோயில் மஹா கும்பாபிஷேகம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் கிராமத்தில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது.
மிதமான மழை பெய்யக்கூடும்!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 114-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லையே… அப்டேட் குமாரு