ஜின்பிங் – மோடி சந்திப்பு!
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் இன்று (அக்டோபர் 23) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.
பிரியங்கா வேட்புமனு தாக்கல்!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நேற்று நள்ளிரவு வரை கனமழை பெய்ததை அடுத்து கோவை மற்றும் திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து இரு மாவட்ட ஆட்சியர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
டானா புயல் உருவாகிறது!
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு!
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு துறை சார்பில் பட்டாசு விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் சென்னையில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் குறைந்த விலையில் இன்று முதல் பட்டாசு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி – ரயில்கள் ரத்து!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா, மேற்கு வங்கத்துக்கும் இயக்கப்படும் 28 விரைவு, அதிவிரைவு ரயில்கள் இன்றும் , நாளையும் ரத்து செய்து கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரை புரட்டியெடுக்கும் கனமழை!
பெங்களூரில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அமரன்’ பட ட்ரெய்லர் ரிலீஸ்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…