ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம் – விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய அவசர மனு மீது இன்று (ஜூலை 7) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் விசாரணை நடைபெற உள்ளது.
அரசு பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல்!
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது செம்பியம் பந்தர் கார்டன் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலி்க்காக தற்போது வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை வருகிறார் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை 10 மணிக்கு சென்னை வருகிறார்.
ட்ரோன்கள் பறக்க தடை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு செல்ல இருப்பதால் அவர் செல்லும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
உதயநிதி பிரச்சாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்வடைய உள்ள நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இரா.சம்பந்தனின் உடல் அடக்கம்!
மறைந்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் உடல் இன்று யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை – ஜனாதிபதி பங்கேற்பு!
ஒடிசாவில் இன்று புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை நடக்கிறது. இதில் நான்கு நாள் பயணமாக நேற்று ஒடிசா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
இஸ்கான் ரத யாத்திரை!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலின் 44ஆம் ஆண்டு ரத யாத்திரை இன்று நடக்கிறது.
தோனியின் 43-வது பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஹைதராபாத்தில் இந்தியன் 2 படக்குழு!
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்காக இன்று ஹைதராபாத்தில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
வெற்றி பெறுமா இந்தியா?
இந்தியா – ஜிம்பாவே அணிகள் இடையிலான இரண்டாவது டி20 சர்வதேசப் போட்டி ஹராரே விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: நேரம் கடந்து சாப்பிடுபவரா நீங்கள்?
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?