பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது ஆண்டு பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15) மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மரியாதை!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.00 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஜார்க்கண்டில் பிரதமர் மோடி
தேர்தல் நடைபெறவுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி ஜாம்ஷெட்பூரில் 6 வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். மேலும் ரூ.21 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விநாயகர் சிலை கரைப்பு!
சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்!
புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 50 பேருந்துகள் இன்று இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
ப.சிதம்பரம் பிறந்தநாள்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தனது 79ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் இன்று விநாயகர் சிலைகளை கரைக்க உள்ளதால் மாநகரத்தில் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை எதிரொலி!
ஓணம் பண்டிகை காரணமாக கோயம்பேடு, தோவாளை ஆகிய மார்க்கெட்டுகளில் அனைத்து பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.
ஊட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சிறுதானியங்களில் சமைக்க சிரமப்படுகிறீர்களா?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா: அப்டேட் குமாரு