அதிமுக போராட்டம்!
முறையான மின்சாரம் வழங்க வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 30) அதிமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாலை தோண்ட அனுமதி கிடையாது!
சென்னையில் இன்று முதல் சாலைகளை தோண்டுவது நிறுத்தப்படும் என்றும், புதிதாக சாலைகளை தோண்ட அனுமதி வழங்கப்படாது என்றும் மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
விமானப் படை புதிய தலைமைத் தளபதி பதவியேற்பு!
விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று பதவியேற்கவுள்ளார்.
இ-கட்டா (E Khata) அறிமுகம்!
கர்நாடகாவில் இன்று முதல் சொத்து பதிவு செய்வதற்கு இ-கட்டா (E Khata) என்ற புதிய நடைமுறை மாநிலம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்றே கடைசி நாள்!
மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) தொலைதூர கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு இன்றே கடைசி நாள் என சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
HCL நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு!
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இன்றும், நாளையும் International Voice Process for Banking Sector (Freshers) பணிக்கு இண்டர்வியூ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் டாக்டர்கள் பணிநிறுத்தம்!
மேற்கு வங்காளத்தில் சிகிச்சையின்போது பெண் மரணம் அடைந்த விவகாரத்தில், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஜூனியர் டாக்டர்கள் இன்று பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
4வது நாள் ஆட்டம் வாய்ப்புள்ளதா?
இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டமாவது இன்று நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 197-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மிளகு சம்பா
டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!