சபாநாயகர் தேர்தல்!
மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (ஜூன் 25) நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளை சமாளித்து பாரம்பரிய வழக்கப்படி புதிய சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.
ஆளுநரை சந்திக்கும் அ.தி.மு.க. குழு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு இன்று சந்திக்கிறது.
தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் பதவியேற்பு!
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்கள் இன்று பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது!
விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது தீர்ப்பு!
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அரையிறுதி செல்லுமா ஆப்கானிஸ்தான்?
டி20 உலகக் கோப்பை கடைசி சூப்பர் 8 சுற்றில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியிருக்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ்!
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் (1983) வென்ற நாள் இது.
5 மாவட்டங்களில் மிக கனமழை!
தமிழ்நாட்டின் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கீரை கட்லெட்
டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியை உடைக்க, டெல்லி காய்ச்சும் கள்ளச்சாராயம்!