இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூன் 27) இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெற உள்ள 2வது அரையிறுதிப்போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
இன்று எந்த துறை மீதான விவாதம்?
இன்றைய சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் மற்றும் பைடன் விவாதம்!
அமெரிக்காவின் அதிபர் தேர்தலையொட்டி போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் இன்று நேருக்கு நேர் விவாதம் நடத்த உள்ளனர்.
ஈஷா ஆதியோகி வளாகம் மூடல்!
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் இருக்கும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது.
பிரபாஸின் ’கல்கி 2898 ஏடி’ ரிலீஸ்!
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
உலக மக்கள்தொகை விழிப்புணர்வு!
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெறவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 102வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் விலை லிட்டருக்கு 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓடிடியில் ’குருவாயூர் அம்பலநடையில்’ ரிலீஸ்!
பிருத்விராஜ் நடித்துள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாள திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் சில்லி 65
தக்காளி சாஸ் ரசம் : அப்டேட் குமாரு