டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வேட்பாளர் ஒப்புதல் படிவம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றிக்கையின் படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு வழங்கப்படுகிறது.

விசிக மருத்துவ முகாம்!

வேங்கைவயல் கிராமத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் இன்று மாலை தவ்ஹித் ஜமாத் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்!

தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

திருச்செந்தூர் சிறப்பு ரயில்!

தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.

புதிய இந்தியாவில் வாய்ப்புகள்!

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் இன்று மாலை நடைபெறும் ’புதிய இந்தியாவில் வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 258வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு புதிதாகத் தொற்று உறுதியாகியுள்ளது. 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவிழக்கும் காரணத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வாத்தி இசை வெளியீட்டு விழா!

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

கிச்சன் கீர்த்தனா: பனீர் பரா பப்பட்

கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *