டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Kavi

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

3ஆம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடர்!

2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதானி குழும விவகாரம்!

அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்க திமுக எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இடைத்தேர்தல் நிலைப்பாடு – பாஜக அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சித் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்!

ஈஸ்ட் லண்டனில் இன்று நடைபெற இருக்கும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியும் மோதுகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 257-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாதக வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவனீதன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பழனி – உண்டியல் பணம் எண்ணும் பணி!

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்று நடைபெறுகிறது.

சென்னை எப்சி – ஒடிசா எப்சி மோதல்!

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று சென்னை எப்சி – ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.

வானிலை அப்டேட்!

இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

“மக்களுடன் போலீஸ் நெருங்க வேண்டும்” கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel