டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

அனைத்துக் கட்சி கூட்டம்!

10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து விவாதிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(நவம்பர் 12) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இமாச்சலப் பிரதேச தேர்தல்!

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 68சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

கனமழை விடுமுறை!

கன மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக 234சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அனிருத் இசைக்கச்சேரி!

இசையமைப்பாளர் அனிருத்தின் Once upon a time எனும் இசைக்கச்சேரி இன்று கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

சென்னையில் அமித்ஷா!

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், யுபி யோதாஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் 789பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காதல் தி கோர் அப்டேட்!

ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா நடிக்கும் காதல் தி கோர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 175-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜார்கண்ட்: அரசு வேலைகளில் 77% இடஒதுக்கீடு!

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேட்டில் இருவர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0