மல்லிகார்ஜுன கார்கே பதவி ஏற்பு!
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிர்கார்ஜூன கார்கே இன்று (அக்டோபர் 26) பதவி ஏற்கிறார்.
மோட்டார் வாகன சட்டம்!
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அடிப்படையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் அபராதம் விதிக்கப்படும்.
நயன் – விக்கி இரட்டை குழந்தை!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக இன்று அறிக்கை வெளியிடப்படுகிறது.
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
ஆந்திர சட்டக்கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உலக கோப்பை போட்டி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 158-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
AS04 டீசர் வெளியீடு!
இந்தி நடிகர் ஆயுஷ் ஷர்மா நடித்த AS04 படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக, இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்த சிசிஐ: காரணம் என்ன?