எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: இன்று விசாரணை!
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வருகிறது.
முதல்வரின் இன்றைய நிகழ்ச்சி!
மூன்று மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூரில் நடைபெறும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டியில் நடைபெறும் கட்சி விழாவில் பங்கேற்கும் அவர், கலைஞரின் வெண்கல சிலையையும், கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
கோப்ரா ட்ரெய்லர்!
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா‘ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
பரந்தூர் விமான நிலையம்: அன்புமணி கருத்து கேட்பு!
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு பணிகளால் பாதிக்கப்படும் மக்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கருத்து கேட்கிறார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
குறையும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் புதிதாகச் சென்னையில் 82 பேருக்கு உட்பட 545 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 649 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 21 ஆயிரத்து 357ஆக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
இன்று 96ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102 .63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ 94-24 காசுகளுக்கும் விற்பனையாகின்றன.
இன்று விஜயகாந்த் பிறந்தநாள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் வருகைத் தருவார் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய தொழிலாளர் உச்சி மாநாட்டில் உரையாற்றும் பிரதமர்!
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
நெஞ்சை கேளு பாடல் வெளியீடு!
பிசாசு 2 திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘நெஞ்சை கேளு’ மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ஃபரிதா பாபு – ஆம்பூர் ரெய்டின் அரசியல், அமலாக்கப் பின்னணி!