டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதிங்க…

அரசியல்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – தோனி பங்கேற்பு!

44வது செஸ் போட்டியின் நிறைவு விழா, இன்று (ஆகஸ்ட் 9) மாலை 6:00 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதுமட்டுமின்றி செஸ் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும், நிறைவு விழாவில் பங்கேற்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் – போக்குவரத்து மாற்றம்!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

காமன்வெல்த் – 4வது இடம்பிடித்த இந்தியா!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் மட்டும் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் வீரர் சரத் கமல், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் பிவி சிந்து, ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் லக்சயா சென் மற்றும் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்தனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 80வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒருலிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,911 பேருக்கு பரிசோதனை செய்ததில் 972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 35,53,670 ஆக உள்ளது. தொற்றில் இருந்து 1,453 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,06,229 ஆக உயர்ந்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி முறிவு?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதா? வேண்டாமா என்பது தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி இன்று (ஆகஸ்ட் 9) முடிவெடுக்க இருக்கிறது.

காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசியில் இன்று தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை துவங்குகிறது. இந்த பாதயாத்திரை வரும் 14ஆம் தேதி நிறைவு பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முகரம் பண்டிகை – விடுமுறை!

முகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை, வரும் 20ஆம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என்று ஆளுநர் தமிழிசை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்று 40 நாட்கள் ஆன நிலையில், அமைச்சரவை இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்கம் வெல்லுமா இந்தியா?

செஸ் ஒலிம்பியாட் தொடரில், கஜகஸ்தான் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் ‘ஏ’ அணி முதலிடத்திற்கு முன்னேறி நிலையில், தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த 10வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி, ஈரான் அணியை போராடி வீழ்த்தியது. இந்திய ‘பி’ மற்றும் சி அணிகள் முறையே, உஸ்பெகிஸ்தான், ஸ்லோவாக்கியா அணிகளுக்கு எதிராக டிரா செய்தனர். மகளிர் பிரிவில் இந்திய ‘பி’ அணி நெதர்லாந்தை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இதேபோன்று, இந்தியா மகளிர் ‘சி’ அணி, சுவீடன் அணியை 3-1 என வீழ்த்தியது. மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய ‘ஏ’ அணி, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று காலை போட்டியின் கடைசி (11வது) சுற்று நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.