டாப் 10 செய்திகள் இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top 10 news tamil

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.

வேளாண் நிழல் நிதிநிலை

பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிடுகிறார் அன்புமணி ராமதாஸ்.

விவசாய அணி செயற்குழு கூட்டம்

பாஜக தலைமையகம் கமலாலயத்தில் விவசாய அணி செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் 278வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை அப்டேட்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மின் தடை

சென்னையில் இன்று பல்லாவரம், போரூர், அம்பத்தூர், பெரம்பூர், கே.கே. நகர் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட்

திருப்பதி தேவஸ்தான இணையத்தளத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெடுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று பெங்களூரு மற்றும் கோவா அணிகள் மோதவிருக்கின்றன.

டிஎன்பிஎல் கிரிக்கெட் ஏலம்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

அதிமுக பொதுக்குழு க்ளைமாக்ஸ் தீர்ப்பு- கட்சியைக் கைப்பற்றப் போவது யார்? முழுப் பின்னணி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel