வேலைவாய்ப்பு முகாம்!
300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர்15) சென்னை ராயப்பேட்டையில் நடைபெறுகிறது.
திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!
இந்தி திணிப்பிற்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சிஎஸ்ஐஆர் கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிஎஸ்ஐஆர் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர் அணி வெற்றி!
நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் 35-வது நாளை கர்நாடக மாநிலம் ஹளகுந்தி முட் பகுதியில் துவங்கி, சங்கநாக்கல்லு பகுதியில் நிறைவு செய்கிறார்.
வானிலை நிலவரம்!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை – பெங்களூரு போட்டி டிரா!
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் நேற்று மோதிய சென்னை, பெங்களூர் அணிகள் 1-1 என்ற சரிசமமான கோல் கணக்கில் இருந்ததால் போட்டி டிரா ஆனது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பினால், 4,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காந்தாரா வெளியீடு!
காந்தாரா திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 147-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குஜராத் தேர்தல்: தேதி அறிவிக்காததற்கு என்ன காரணம்?
70 ஆம் ஆண்டில் பராசக்தி: தயாராகிறது ஹெச்டி பிரிண்ட்!