தீபாவளி பண்டிகை!
இந்தியா முழுவதும் இன்று (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மருது பாண்டியர் குரு பூஜை விழா!
மருது பாண்டியர்கள் குரு பூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
இடம் பொருள் ஏவல் டிரைலர்!
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
உலக கோப்பை போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பங்களாதேஷ், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மின்சார ரயில்கள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.
வானிலை நிலவரம்!
வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வாத்தி போஸ்டர் வெளியீடு!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் புதிய போஸ்டர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுவதால் சென்னை பசுமை வழி சாலை – டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக செல்பவர்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஆர்.கே.மடம் சாலை – மந்தைவெளி சந்திப்பிலிருந்தது பிராடிஸ் கேசில் சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 156-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒடிசா அணி வெற்றி!
நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வீழ்த்தியது.
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பொது சுகாதார பிரிவில் பணி!
தீபாவளி மறுநாள் விடுமுறை: தமிழக அரசு!