இந்திய இலச்சினை!
ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவின் இணையதளம் மற்றும் இலச்சினையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 8) வெளியிடுகிறார்.
சந்திர கிரகணம்!
இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் மதியம் 2.39 மணியிலிருந்து மாலை 6.29 மணி வரை நிகழும்.
இமாச்சல் தேர்தல்!
இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு விண்வெளி கொள்கை!
தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை கொள்கை 2022 இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கல்வி பொதுப்பட்டியல் வழக்கு!
மாநிலங்களுக்கான கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
சீமான் பிறந்தநாள்!
நாம் தமிழர் கட்சி சீமான் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அக்கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனல் மேலே பனித்துளி பாடல்!
கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி படத்தில் இடம்பெற்றுள்ள ‘எது நான் இங்கே’ என்ற பாடல் இன்று காலை வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 172-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புரோ கபடி போட்டி!
இன்று புரோ கபடி போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதா அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சன்னி லியோன் ஊட்டிய பால்கோவா: சந்தோசத்தில் ஜி.பி.முத்து
இலவச மின் இணைப்பு: நவ. 11 கரூரில் தொடக்கம் – செந்தில் பாலாஜி