அன்னதான திட்டம்!
ராமேஸ்வரம் ராமநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 31) துவக்கி வைக்கிறார்.
விசிக ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வாகனம் பறிமுதல்!
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை 6மணிக்கு மேல் இரண்டுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று காலை 10மணியளவில் நெய்வேலி KNT மஹாலில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் டெல்லி பயணம்!
பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மறைவு குறித்து துக்கம் விசாரிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
துணிவு ட்ரெய்லர்!
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 14பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 74பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பத்து தல அப்டேட்!
கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் பத்து தல படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 224-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்: பிசிசிஐ வெளியிட்ட தகவல்!
கிச்சன் கீர்த்தனா : கேரள ப்ளம் கேக்